உச்ச நீதிமன்ற தீர்ப்பு (பாகம் 3)
தொழிற்சங்கங்கள் மற்றும் தி. மு. க சார்பில் தமிழக அரசின் பணி நீக்க நடவடிக்கையை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டன. தமிழக அரசு விடுவதாக இல்லை. கே.கே.வேணுகோபால் மற்றும் பி.பி.ராவ் என்ற தலைசிறந்த வழக்கறிஞர்கள் தமிழக அரசு சார்பாக வாதாடினார். இரு தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதிகள் பரபரப்பான தீர்ப்பைவழங்கினர். "Employees thinking strike is their birth right, No political party or organisation can claim a right to paralyze the economic and industrial activities of a state or nation or inconvenience citizens even t he trade unions, who have a guaranteed right for collective bargaining, have no right to go on strike. Government employees could not complain that they could hold society to ransom by going on strike to ventilate their grievances" தமிழக அரசு ஊழியர்கள் போராட்டம் என்ற பெயரில் மாநில அரசையே ஸ்தம்பிக்க வைத்து விட்டனர். ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்வது தங்கள் பிறப்புரிமை என்று கருதக்கூடாது. அவர்களுக்கு போராட்டம் செய்ய உரிமை இல்லை . தமிழக அரசு எடுத்த நட...