இந்த கட்டுரையின் ஒரு பகுதி புதியதலைமுறை வார இதழின் 7 மார்ச் 2019 பதிப்பில் வெளிவந்தது.. என்னதான் 60+ வருடங்களாக ஜனநாயக நாடாக இருந்தாலும், ஓட்டு பெட்டியை தாண்டி சாதாரண மக்களுக்கு தங்கள் குரலை பதிவு செய்ய ஒருவாய்ப்பு சமீப ஆண்டுகளாகத்தான் கிடைத்துள்ளது. அதற்கு சமூக ஊடகங்களுக்கு தான் நாம் நன்றி சொல்லவேண்டும். வெறும் பொழுது போக்கு இடமாக மட்டுமே துவங்கப்பட்ட சமூ க ஊடகங்கள் இன்று ஆட்சி மாற்றத்தை கூட கொண்டுவரும் சக்திகளாக மாறிப்போயுள்ளன. விஞ்ஞானம், சமையல், விவசாயம், முதலீட்டு ஆலோசனைகள், கேன்சருக்கான மருந்து (ஆமாங்க நம்புங்க), அரசியல், ஆபாசம் என எண்ணற்ற தலைப்புகளில் சமூக ஊடகங்களில் செய்திகள் பரப்பப்படுகின்றன. இப்படி குறுகிய காலத்தில் விஸ்வரூப வளர்ச்சி கண்ட சமூக ஊடகங்களுடன் சில தீய செயல்களும் சேர்த்தே வளர்ந்துள்ளன. மத, இன, மொழி சார்த்த உணர்ச்சிகளை தூண்டும் வன்முறையான பல பதிவுகள் கூட சர்வசாதாரணமாக சமூக ஊடகங்களில் பரப்பப்படுகின்றன. காரணம் சமூக ஊடகங்களுக்கு சென்சார் கிடையாது. மனம்போன போக்கில் யாரும் யாரைப்பற்றியும் என்ன...