Posts

Showing posts from 2017

2ஜியும் மோடிஜியும்

Image
வழக்கு தொடங்கப்பட்ட பொழுது காட்டிய வேகத்தை CBI வழக்கை நிரூபிக்க காட்டவில்லை என்கிறார் நீதிபதி.. தவறே நடக்கவில்லை என்பதல்ல தீர்ப்பு, தவறு நடந்திருக்கலாம் ஆனால் CBI நிரூபிக்க தவறி விட்டது என்பதே தீர்ப்பு.. CBI என்பது இங்கே மோடி அரசை தான் குறிக்கிறது... BJP இந்த வழக்கை சரியாக நடத்தவில்லை.. திமுக விற்கு சாதகமாக நடந்தது.. தப்பிக்க விட்டது அவ்வளவு தான் சங்கதி. BJP யின் இந்த செயல்பாடு அவர்கள் செய்த பெரிய அரசியல் பிழையாக எதிர்கால வரலாற்றில் இடம்பெறலாம்.. காங்கிரஸ் கம்யூனிஸ்ட் என யாரும் இந்த வழக்கை நிரூபிக்க பெரிய அளவில் முயற்சி செய்யவில்லை என்றும் சொல்லலாம்..

FRDI Bill 2017 - சர்ச்சையும் உண்மையும்

Image
(கொஞ்சம் நீண்ட கட்டுரை பொறுமையுடன் படிக்கவும்) 1991 க்கு முன்பு வரை பெரிய தொழில்கள், வங்கிகள் எல்லாம் அரசாங்கத்தின் வசம்தான் இருந்தது. 1991 உலகமயமாக்கலுக்கு பிறகு சோப்பு தயாரிப்பு முதல் ISRO வின் ராக்கெட் உதிரி பாகங்கள் தயாரிப்பு வரை அனைத்திலும் தனியார் பங்களிப்பு அனுமதிக்கப்பட்டுவிட்டது. உற்பத்தி நிறுவனங்கள் விபத்து, போட்டிநிறுவனங்களிடம் சந்தை இழப்பு (உதாரணமாக RCom, Tata Docomo) , சந்தையின் தேவைக்கு ஏற்ப புதுப்பித்து கொள்ளாமை (அம்பாசடர் கார் ஜாம்பவான் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ்), ஊழல் புகார் (சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனம்), அலட்சியம் (BSNL) போன்ற ஏதேனும் காரணத்தால் தொழில் நொடித்து போகலாம். நொடித்து போகும் அல்லது திவாலாகும் நிறுவனங்கள் தாங்கள் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாவிட்டால் வங்கிகள் அந்த கடனை வாரா கடன்  (Bad Loans/ Non Performing Asset) என்று அறிவிக்கின்றன. இப்படி வங்கிகளுக்கு வரவேண்டிய வாராக்கடன் அளவு மட்டும் சுமார் 10 லட்சம் கோடி ரூபாய்.  இந்த வாரக்கடனை தொகையை வசூல் செய்ய மத்திய அரசு கொண்டுவந்ததே IBC எனப்படும் Insolvency & Bankruptcy code அல்லது திவால் ...

திவால் சட்டத்தில் தேவையான மாற்றம்

Image
பெரு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடனை திரும்ப வசூல் செய்ய கொண்டுவரப்பட்ட IBC (Insolvency & Bankruptcy Code) எனப்படும் திவால் சட்டத்தில் இருந்த ஒரு பெரிய ஓட்டை இப்பொழுது அடைக்கப்பட்டுள்ளது. பெரிய நிறுவனத்தை நடத்தும் முதலாளிகள் (promoter) வேண்டுமென்றே பெரிய கடன் தொகையை பெற்று (வங்கி அதிகாரிகளும் இதில் உடந்தை) பின் அந்த நிறுவனம் நஷ்டம் என்று கணக்கு காட்டி பணத்தை சுருட்டி சென்றதால் வங்கிகளின் வாரா கடன் அளவு பலமடங்காக அதிகரித்தது. இந்திய வாராக்கடன்களின் மொத்த மதிப்பு சுமார் 10 லட்சம் கோடி ரூபாய். இதை சரி செய்ய கொண்டுவரப்பட்டதே IBC என்ற திவால் சட்டம். இந்த சட்டப்படி கடனை திரும்பி செலுத்தாத நிறுவனத்தை வங்கிகள் திவால் என அறிவித்து ஏலம் விடுவதன் மூலமோ அல்லது மற்றவருக்கு  நிறுவனத்தை விற்பதன் மூலமோ தங்கள் கடன் தொகையை திரும்ப பெறலாம். source: google ஆனால் இந்த சட்டத்தில் இருந்த ஒரு ஓட்டையை தான் பெரிய அளவில் முதலாளிகள் பயன்படுத்த முயன்றனர். ஏற்கனவே நிறுவனத்தை திவாலுக்கு தள்ளிய முதலாளி மீண்டும் ஏலத்தில் பங்கேற்று தனது நிறுவனத்தை தானே குறைந்த விலைக்கு ஏலமெடுத்த கூத்து நடைபெற...

நல்ல தமிழில் எழுதுவோம் - 1

Image
தமிழில் எழுதும் பொழுது பலருக்கு ஏற்படும் சந்தேகம் மூன்று சுழி " ண் ", இரண்டு சுழி " ன் " மற்றும் " ந் " இவற்றில் எதை பயன்படுத்துவது என்பது. இந்த குழப்பத்துக்கு எளிய தீர்வை நண்பர் ஒருவர் அனுப்பினார். "ண்" இதன் பெயர் டண்ணகரம், "ன்" இதன் பெயர் றன்னகரம், "ந்" இதன் பெயர் தந்நகரம் அதாவது எப்பொழுதெல்லாம் மூன்று சுழி ண வருகிறதோ அதைத்தொடர்ந்து வரும் எழுத்து ட வரிசையாகத்தான் இருக்கும் (அதனால் தான் டண்ணகரம்). உதாரணம் - மண்டபம் (கவனிக்க மன்டபம் என்பது தவறு), இரண்டு அதேபோல் எப்பொழுதெல்லாம் இரண்டு சுழி ன வருகிறதோ அதைத்தொடர்ந்து வரும் எழுத்து றகர வரிசையாகத்தான் இருக்கும். உதாரணம் - அன்றாட, இன்றைய அதேபோல் ந வை தொடர்ந்து த எழுத்துக்களே வரும் உதாரணம் - இந்தியா (இன்தியா என்பது தவறு) நல்ல தமிழில் எழுதுவோம்  - விக்கி 

GST (ஜிஎஸ்டி) - எனது பதிவுகள் - 3

Image
ஜிஎஸ்டி வருவதற்கு முன்னாள் நாம் குறைவான வரி செலுத்திவந்ததை போன்ற ஒரு மாயை உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் நிஜம் அதுவல்ல. உதாரணமாக ப்ளைவுட் (plywood) க்கு ஜிஎஸ்டி க்கு முன்னாள் வரி 31 சதவீதம், ஜிஎஸ்டி க்கு பின் அது 28 சதவீதம் தான். ஆனால் முந்தைய நாட்களில் வாட் எனப்படும் மதிப்பு கூட்டு வரி (14.5%) மட்டுமே பில்லில் காட்டப்படும். மற்ற வரிகள் பில்லில் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. அந்த loop hole லை  வியாபாரிகள் பெரிய அளவில் பணம் சம்பாதிக்க பயன்படுத்துகின்றனர். மக்களிடம் முன்னாள் வரி 14.5% இன்று 28% என்று கூறி பொருள்களின் விலையை ஏற்றி விட்டுள்ளனர்.  இதுவே எல்லா தொழிலிலும் நடக்கிறது.  இதுபோன்ற ஏமாற்றம் வேலைகளை நாம் செய்தால் திருட்டு பயல் என்று முத்திரை குத்துவார்கள் இதே வியாபாரி செய்தால் வியாபார தந்திரம் என்று பெருமை கொள்வார்கள். --- Just an re iteration Its not that we are paying less tax before GST. E.g. Tax for Plywood - 31% before GST & 28% after GST (18% from today) But in previous regime, only VAT was shown in bill (which was 14.5%)...

GST (ஜிஎஸ்டி) - எனது பதிவுகள் - 2

Image
உணவகங்கள் (AC & Non AC) input credit எடுத்து கொள்ள முடியும் என்பதால் தான் GST வரி 12 மற்றும் 18 சதவீதமாக வைக்கப்பட்டது (எனினும் அது அதிக வரி தான்) ஆனால் உணவகங்கள் உணவு விலையையும் ஏற்றி வரியை அதன் தலையில் போட்டனர். எனவே உணவகங்களுக்கு வழங்கப்பட்டு வந்த input credit ரத்து செய்யப்பட்டுள்ளது. அத்தோடு வரியும் 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. சரி உணவகங்கள் விலையை குறைக்குமா ? பெரிதாக குறைப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. இப்போது காரணம் கேட்டால் input credit ரத்து செய்யப்பட்டுவிட்டது எனவே விலையை குறைக்க முடியாது என்பார்கள். Input credit கொடுக்கப்பட்டது என்பதற்கு அவர்களே ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பார்கள்.. input credit கொடுத்தார்களே ஆனால் ஏன் உணவு விலையை ஏற்றினீர்கள் என்று கேட்டால் நமக்கு கெட்ட வார்த்தையில் திட்டு விழலாம்..

ஏன் GSTயை ஆதரித்து இத்தனை post விக்கி ??

Image
காரணம் informal sector என்று சொல்லப்படும் நிறுவனங்கள் பெரிய அளவில் வரி ஏய்ப்பு செய்கின்றன என்பது என் கருத்து.. அதே சமயம் informal sector நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களையும் பெரிதாக ஏமாற்று கின்றன. உதாரணமாக formal sector நிறுவனத்தில் உங்களுக்கு பணி கிடைத்தால் முதல் வேலையாக உங்களுக்கு PF, pension கணக்குகள் துவங்கப்படும். அதில் உங்கள் சம்பளத்துக்கு ஏற்ப ஒரு தொகை மாதமாதம் கட்டப்படும்.. அதே போல் இன்சூரன்ஸ் policy கண்டிப்பாக குடும்ப உறுப்பினர்களுக்கும் சேர்த்து வழங்கப்படும். உங்கள் சம்பளம் வங்கிகணக்கில் மட்டுமே போடமுடியும் என்பதால் அந்த பணம் கறுப்பு பணமாக இருக்காது. உங்கள் சம்பளத்தை வைத்தே நீங்கள் வங்கிகளில் லோன் பெறுவதோ வீடு கட்டுவதோ சாத்தியம். டீ கடையில் வேலைசெய்பவர் உங்களை விட அதிகம் சம்பாதித்தாலும் அவருக்கு வங்கிகள் லோன் தரவோ அவர்கள் மகனுக்கு கல்வி கடன் தரவோ தயங்கும் என்பதை நினைவில் கொள்க.. இருபது வருடம் வேலைபார்த்தால் குறைந்த பட்சம் சில லட்சங்கள் உங்களுக்கு PF தொகையாக கிடைக்கும் ஆனால் informal sectorல் பணி புரிந்தால் 20 வருடம் சம்பாதித்து வரவுக்கு செலவுக்கும் தான் சரியாக இ...

GST (ஜிஎஸ்டி) - எனது பதிவுகள் - 1

Image
GST யை வியாபாரிகள் எதிர்க்க காரணம் அவர்கள் வரி அதிகம் கட்டவேண்டி வரும் என்பதால் அல்ல (GST வரியை customer தான் கட்டுகிறார் வியாபாரி கட்டவில்லை), GST வருவதற்கு முன் தொழில் நடத்தி வந்த விதத்தால் தான். உதாரணமாக ராஜேஷ் என்பவர் ஒரு வருடத்திற்கு 50 லட்சம் ரூபாய்க்கு தொழிலில் turnover செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். GST வருவதற்கு முன்னாள் அவர் அரசாங்கத்துக்கு 5 அல்லது 10 லட்சத்துக்கு தான் turnover ராக கணக்கு காட்டுவார். GST வந்தபிறகு அவர் 50 லட்சத்துக்கு கணக்கு காட்டவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 50 லட்சம் கணக்கு காட்டுவதில் இல்லை வியாபாரிக்கு பிரச்சனை. ஆனால் போனவருடம் 5 லட்சம் தொழில் நடந்ததாக கணக்கு காட்டிவிட்டு இந்த வருடம் 50 லட்சத்துக்கு கணக்கு காட்டினால் வரி விதிக்கும் அதிகாரிக்கு சந்தேகம் வரும். ஒரே வருடத்தில் தொழில் 10 மடங்கு உயர்வது அவ்வளவு எளிதல்லவே. எனவே இந்த வருடம் ஒழுங்காக கணக்கு காட்டினாள் இத்தனை வருடம் இவர்கள் மறைத்த வரி ஏய்ப்பு அனைத்தும் வெளியே வந்துவிடும் எனவே தான் GST என்றவுடன் ஐயோ ஐயோ என கொதிக்கிறார்கள். ஆனால் நேற்று மோடி வெளியிட்டிருக்கும் அறிவிப்பு வியாபார...

சென்னை ஓபன் இனி இல்லை !

Image
சென்னை ஓபன் இனி இல்லை ! இனி அது மஹாராஷ்டிரா ஓபன் ! காரணம் நிதி இல்லையாம் ! சென்னை ஓபன் தமிழ்நாட்டுக்கு அத்தனை முக்கியமா? உலகத்தில் நடக்கும் டென்னிஸ் தொடர்களில் 4 கிராண்ட்ஸ்லாம் (Grand slam) போட்டிகளுக்கு அடுத்து 5வது பெரிய டென்னிஸ் தொடர் ATP World Series. சென்னை ஓபன் ATP World Series தொடரில் ஒன்று. இந்தியாவில் நடக்கும் ஒரே ATP World Series போட்டி நம்ம சென்னை ஓபன் மட்டும் தான். சென்னையில் 22 வருடமாக தொடர்ந்து நடைபெற்றுவந்த சென்னை ஓபன் போட்டியை அடுத்த வருடம் நடத்த நடவடிக்கை கூட எடுக்க வக்கில்லாத அரசு நம்ம எடப்பாடி அரசு ! ஜெயலலிதா இருந்த வரை விளையாட்டு துறைக்கு பெரிய அளவில் உதவி செய்துவந்தார். இதை நான் சொல்லவில்லை பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு சொன்னார். 2013 ஆம் ஆண்டு World Chess championship போட்டியை சென்னையில் நடத்த பெரிய அளவில் முயற்சி மேற்கொண்ட ஜெயலலிதா 29 கோடி நிதி ஒதுக்கி Vishwanath Anand vs Magnus Carlsen போட்டியை இந்தியா பெருமைப்படும் வண்ணம் நடத்தி நினைத்ததை முடித்துக்காட்டினார். இந்தியாவில் போட்டி என்றவுடன் தயங்கிய Magnus Carlsen னை சென்னைக்கு வரவழைக்க...

Cascading effect of having an ugly Government (ஒரு திறமையற்ற அரசால் ஏற்படும் விளைவுகள்) - Episode 2

Image
ஏற்கனவே கணித்தது போல் தமிழ்நாடு அரசு கொண்டுவந்த மருத்துவ படிப்பில் state board மாணவர்களுக்கு 85 சதவீத உள் ஒதுக்கீடு நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது. எப்படியும் நீதிமன்ற வழக்கில் இந்த இடஒதுக்கீடு தோற்கும் என்று தெரிந்தே தான் தமிழ்நாடு அரசு உள் ஒதுக்கீட்டை அறிவித்தது. இப்போ ஈஸியா அறிக்கை விடலாம் நாங்க மாணவர்களுக்காக இடஒதுக்கீடு கொண்டுவந்தோம் ஆனால் நீதிமன்றத்தின் தடுத்து விட்டது என்று. ரமணா படத்தில் வரும் டாக்டர் மாதிரி அமைச்சர் பேட்டி கொடுப்பார் "சாரி நாங்க எவ்வளவோ try பண்ணோம் state board மாணவர்கள காப்பாத்த முடியல"

Cascading effect of having an ugly Government (ஒரு திறமையற்ற அரசால் ஏற்படும் விளைவுகள்) - Episode 1

Image
தமிழ்நாடு மருத்துவ கலந்தாய்வில் state boardல் படித்தவர்களுக்கு 85 சதவீதம் ஒதுக்கீடு அளித்ததற்கு எதிராக கோர்ட்டில் உள்ள வழக்கில் இன்னும் தீர்ப்பு வரவில்லை. (தீர்ப்பு தமிழ்நாடு அரசுக்கு சாதகமாக வராது என்று நான் நினைக்கிறேன்) எனவே மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு திட்டமிட்ட படி நடைபெறாது. தமிழ்நாட்டை பொறுத்தவரை மருத்துவ கலந்தாய்வு முடிந்தால் தான் பொறியியல் கலந்தாய்வு நடத்தப்படும். எல்லாவருடமும் ஜூலை 13 தேதிக்கு பாதி பொறியியல் கலந்தாய்வே முடிந்திருக்கும். இப்பொழுது பொறியியல் கலந்தாய்வு தேதி கூட அறிவிக்கப்படவில்லை. பொறியியல் துறையில் ஏற்கனவே வேலைவாய்ப்பு குறைந்து விட்டது. நிறுவனங்கள் மாணவர்களை தட்டி கழிக்க history of arrear இருக்கக்கூடாது. குறைந்தது 70 சதவீத CGPA இருக்கவேண்டும் போன்ற பல criteria களை முன்வைக்கின்றன. பொறியியல் கலந்தாய்வு தேதியே இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனவே கல்லூரிகள் திறப்பதும் தாமதமாகும். பொறியியல் படிப்பில் முதல் வருடத்தில் அதிலும் குறிப்பாக M1 மற்றும் M2 போன்றவற்றில் தான் பலரும் arrear வைப்பார்கள். இப்பொழுது கல்லூரிகள் திறப்பது தாமதமானாலும் semester தேர...

உணவு விற்பனையில் அந்நிய நேரடி முதலீடு

Image
இந்திய அரசு உணவு பொருட்கள் விற்பனை செய்யும் (Food only Retail) சில்லறை வணிகத்தில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் அந்நிய நாட்டு நிறுவனங்கள் கடைகளாகவோ (Brick and Mortar stores) அல்லது இணைய கடைகளாகவோ (online shops) உணவு துறையில் இந்தியாவில் கால்பதிக்க முடியும். ஆனால் ஒரேயொரு நிபந்தனை இந்தியாவில் மட்டுமே அவர்கள் கொள்முதல் செய்யமுடியும். (அதாவது காய்கறி பழங்களை குஜராத்திலோ மதுரையிலோ வாங்கி விற்கலாம் ஆனால் ஆப்கானிஸ்தான் அல்லது இலங்கையில் வாங்க முடியாது) மேலே சொன்ன முதலீடு வாய்ப்பை பயன்படுத்தி அமேசான், Bigbasket, Grofers போன்ற பல நிறுவனங்கள் இந்திய உணவு துறையில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றன. இதற்கு எதிர்வினையாற்றும் முன் கீழே உள்ள இரண்டு செய்திகளை படியுங்கள்.  செய்தி 1: விவசாய தற்கொலை பற்றி செய்தி அதிகம் செய்தி வந்த கடந்த ஆண்டு வெளியான கீழே உள்ள செய்தி உங்களுக்கு அதிர்ச்சி தரலாம் " Total food grain production is estimated at an all-time high of 272 million tonnes in 2016-17, 8% higher than last year, and surpassing the previous record...

அடமானத்தில் போக்குவரத்து கழகங்கள்

Image
உங்கள் ஊர் பேருந்து, பேருந்து நிலையம், அரசு பணிமனைகள் (depot) எந்த வங்கியில் எவ்வளவு தொகைக்கு அடமானம் வைக்கப்பட்டுள்ளன என்று தெரிந்து கொள்ள ஆவலா??     மேலே உள்ள படங்களை பாருங்கள் ! (Source Junior Vikatan Magazine) வெட்கக்கேடு !!! வங்கி அதிகாரி due கட்டவில்லை என்று நம்ம பணிமனைகளுக்கும் பேருந்துகளுக்கும் சீல் வைத்து ஏலம் விடப் போகும் காலம் வெகு தொலைவில் இல்லை..

குளங்களை தூர்வாரும் பணியில் திமுக

Image
கரூர் மாவட்டம் நாதிப்பட்டியில் விவசாய பயன்பாட்டுக்காக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் குளம் ஒன்று தூர்வாரி ஆழப்படுத்தப்பட்டது. குளம் தூர்வாரும் பணி முடிந்த 2 நாட்களில் நாதிபட்டியில் பெய்த 50 மி.மீ மழையால் குளம் நிரம்பி அந்த பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.. இத்தகைய முயற்சிகளின் மூலமே நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த முடியும். திமுகவின் இந்த முன்னெடுப்பு பாராட்ட படவேண்டிய ஒன்று.. JCB வாகனத்தை இயக்கி தூர்வாரும் பணியை தொடங்கிவைக்கும் ஸ்டாலின் (படம் : இணைய தேடலில் பெறப்பட்டது) ஊரை கொள்ளையடித்த காசில் கோவிலில் மழை வேண்டி மணியடித்து கொண்டிருக்கும் மாஃபியா அமைச்சர்களுக்கு மழை நீர் சேமிப்பு பற்றி கோயில் பூசாரியாவது பாடம் எடுத்தால் தேவலை...

நீட் தேர்வு சில தவறான புரிதல்கள்

Image
திருத்தப்பட்ட பதிவு - இதற்கு முன் NEET மதிப்பெண் என்பதற்கு பதிலாக 12ஆம் வகுப்பு மதிப்பெண் என்று இந்த பதிவில் தவறாக குறிப்பிட்டிருந்தேன் மன்னிக்கவும் நீட் தேர்வு மூலம் தமிழகத்தில் 15 சதவீத இடங்கள் மட்டுமே நிரப்பப்படும் (அகில இந்திய மருத்துவ இடங்கள்) மீதி 85 சதவீதம் தமிழக அரசு கவுன்சிலிங் மூலமே நிரப்பப்படும். இது அனைத்து மாநிலத்துக்கும் பொருந்தும். ஏதோ இனி தமிழ்நாட்டில் எல்லா மருத்துவ இடங்களும் ஹிந்திகாரர்கள் அபகரித்து கொள்வார்கள் என்பதெல்லாம் பிதற்றல் ! நீட் தேர்வு  இத்தனை நாள் 100 மருத்துவ இடங்களை தமிழக அரசு கவுன்சலிங் மூலம் நிரப்பினால் இனி 85 இடங்களை தான் தமிழக அரசால் நிரப்ப முடியும் மீதி 15 அகில இந்திய ரேங்க் லிஸ்ட் அடிப்படையில் நிரப்பபடும். அது சரியா தவறா என்பது கண்டிப்பாக விவாதிக்க வேண்டும். ஆனால் எல்லா மருத்துவ இடங்களும் மத்திய அரசால் நிரப்பப்படும் என்பது தவறான புரிதல் !

நதிநீர் இணைப்பில் இறங்கி அடிக்கும் சந்திரபாபு

Image
கோதாவரி நதியிலிருந்து 3000 கன அடி நீர் கடலில் வீணாக கலக்கிறது. இதை வறட்சி பாதித்த கிருஷ்ணா நதி நீர் பகுதிக்கு திருப்பி விடும் திட்டம் தான் பட்டிசீமா நீர் திட்டம்.  திட்டத்தின் ஒருபகுதியாக ‘பட்டிசீமா’ அணைக்கட்டை கட்ட ஆந்திர அரசு முடிவு செய்தது. படங்கள் கூகிள் தேடுதளத்தில் பெறப்பட்டவை  இந்த அணையின் கட்டுமானப் பணி வெறும் 173 நாட்களில் முடிக்கப்பட்டு லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இறங்கி அடிக்கிறார் சந்திராபாபு நாய்டு ! தொப்பிக்கு ஓட்டு கேட்டு ரோட்டில் சுற்றுகிறார் நம்ம எடப்பாடி ! நம்மளும் காவேரி வைகை இணைப்பு திட்டம்னு ஒன்னு 2008 ல் தொடங்குனோம். என்னங்க ஆச்சர்யமா இருக்கா ? அந்த ப்ராஜெக்ட் அடிக்கல் நாட்டி 9 வருஷம் ஆச்சு ! அடிக்கல் நாட்டுனத்தோட சரி ! நம்பமாட்டீங்கன்னா இத படிச்சுப்பாருங்க:  https://en.wikipedia.org/wiki/Kaveri%E2%80%93Vaigai_link_canal http://www.deccanchronicle.com/nation/current-affairs/260317/aps-river-linking-project-finished-in-a-year-enters-limca-book-of-records.html

உலக தண்ணீர் தினம் : திருவாரூர் கமலாலய குளம்

Image
தண்ணீர் தினம் என்றவுடன் எனக்கு முதலில் ஞாபகம் வந்தது திருவாரூர் கமலாலயம் தான் ! திருவாரூர் கோவிலின் கமலாலயம் குளம் 350 மீட்டர் நீளம் 250 மீட்டர் அகலம் உடையது. காவேரி ஆற்றில் வரும் நீர் தானாக குளத்தில் நிரம்பும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. இன்றும் கமலால குளத்தின் நீர் தான் திருவாரூரில் நிலத்தடி நீர் ஓரளவுக்கு இருப்பதற்கு காரணம். ஆனால் திருவாரூர்காரர்கள் (என்னையும் சேர்த்து) கமலாலய குளத்தை பார்த்துக்கொள்ளும் லட்சணம் வெட்கக்கேடானது. குளத்தை சுற்றி இருக்கும் எல்லா மருத்துவமனைகளின் குப்பைகளும் கொட்டுமிடம் கமலாலயம் தான். சொத்துவரியை ஒழுங்காக வசூலிக்க வழியில்லாத நகராட்சி தான் ஏதோ கோடிரூபாய் வருமானம் வரும் என்று கமலாலய குளத்து நீரை மீன் வளர்ப்பிற்கு குத்தகைக்கு விட்டுருக்கிறார்கள். அவர்கள் மீனுக்கு உணவாக இறைச்சிக்கழிவுகளை கொண்டுவந்து கொட்டுகிறார்கள். பலகாலம் குளத்தின் நீர் சுத்தமாகத்தான் இருந்தது. நான் பள்ளி செல்லும் காலத்தில் கூட பலரும் கமலாலயத்தில் தினமும் குளிக்கும் பழக்கமுடியவர்களாக இருந்தார்கள். இன்று அதே கமலாலயம் அருகில் செல்ல முடியாத அளவுக்கு பச்சை நிறத்தில் ஏதோ கெமிக்கல் குப்ப...

இராணுவ கொள்முதலில் வரவேற்கப்படவேண்டிய மாற்றம்

Image
இந்தியாவிற்கு இராணுவ ரீதியில் அதிக உதவி செய்த நாடு ரஷ்யா தான். எனவே நாம் அமெரிக்கா பக்கம் அதிகம் போகக்கூடாது என்ற கருத்து பலர் மத்தியில் உள்ளது, ஆனால் ரஷ்யா செய்யும் ஆயுத உதவிகளில் இருக்கும் பின்னணி தந்திரத்தை நாம் கவனிக்க வேண்டும். IT நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும் development (ஒரு பொருளை உருவாக்கி விற்பனை செய்யவது ) முறையில் வரும் லாபத்தை விட support (ஏற்கனவே விற்றபொருளுக்கு service பார்த்துத்தருவது) முறையில் தான் கொள்ளை லாபம் என்று. ரஷ்யா தான் விற்கும் விமானங்களுக்கு தொழில்நுட்ப உதவியை (Technology Transfer) என்றுமே வழங்குவதில்லை. உதாரணமாக இந்திய அரசு ரஷ்யா தயாரிப்பான சுகாய் விமானங்களில் 55000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. ஆனால் சின்ன சின்ன தொழில் நுட்ப கோளாறுக்கும் நாம் ரஷ்யாவின் உதவியையே நாடவேண்டும். அதற்கு அவர்கள் கேட்கும் சேவை கட்டணமும் மிக அதிகம். இந்திய விமான படையில் சுகாய் விமானங்கள்  மகிழ்ச்சியான செய்தி என்னவெனில் தற்போதைய இராணுவ அமைச்சர் திரு மனோகர் பாரிக்கர் மேலே குறிப்பிட்ட நிலைப்பாட்டில் பெரிய மாற்றத்தை கொண்டுவர முயல...

அவளும் ! நானும் ! நீங்களும் !

Image
ஆண்டு 2011 வீட்ல பொண்டாட்டி தொல்லை போல அதான் வீட்டுக்கு போக மனசில்லாம வண்டிய நிப்பாட்டிவச்சுருக்கான் என்றார் எதிரில் இருந்தவர், பாவம் அவருக்கு தெரியாது கடவுள் ஏன் திருச்சி ரயில்நிலையத்தில் அரைமணிநேரமாக ரயிலை நிறுத்திவச்சுருக்கார்னு ! என் ஹெட்போனில் ஜி வி பிரகாஷ் கத்திக்கொண்டு இருந்தார் ! யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ !   அந்த ஆரஞ்சு கலர் சுடிதார் போட்ட தேவதை அவள் அப்பா அம்மாவுடன் வந்து எனக்கு எதிர்சீட்டில் அமர்ந்தாள். சீட் கிடைத்த சந்தோஷத்தில் ஆயாசமாக அவர்களுக்குள் பேசிக்கொண்டார்கள். ஒரு நொடி ஒரு சிறு பார்வை என் பக்கம் வீசினாள். ஜி வி பிரகாஷின் தொடர்ந்து பாடினார். அடி வெள்ளாவி வச்சுதான் வெளுதான்களா ! உன்னை வெயிலுக்கு காட்டாம வளத்தாய்ங்களா ! நா தலகாலு புரியாம தர மேல நிக்காம தடு மாறி போனேனே நானே நானே ! ஆடுகளம் பாட்டுக்கும், அவளின் ஒரே நொடி காந்தப்பார்வைக்கும் கூட தொடர்பு உண்டு என மேற்கத்திய Choas தியரிக்கு கிழக்கில் நான் புதுவிளக்கம் கொடுத்துக்கொண்டேன் ! அந்த நொடியே அவள் மீது எனக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. அவளை அடிக்கடி பார்த்துக்கொண்டே...

எழுச்சி ! எழுச்சி !

Image
கூடங்குளம் போராட்டம், காவிரி பிரச்சனை, மீத்தேன், ஜல்லிக்கட்டு, முல்லைப்பெரியாறு, இன்று ஹைட்ரோகார்பன் திட்டம் என மக்கள் எழுச்சி கொண்டு போராடும் பிரச்சனைகள் எல்லாவற்றுக்கும் ஒரு அதிசய ஒற்றுமை உண்டு கவனித்தீர்களா ? - இவை எல்லாமே அரசாங்க திட்டங்கள் ! ஏன் மணல் கொள்ளைக்கு எதிராக எந்த மக்கள் எழுச்சியும் நடக்கமாட்டேன் என்கிறது ? ஏன் கல்வி கொள்ளைக்கு எதிராக அரசியல் கட்சிகள் வாயை திறக்கமாட்டேன் என்கின்றன ? ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக மோடிக்கு லெட்டர் எழுதும் எடப்பாடி சார் மணல் கொள்ளை எதிர்த்து ஏன் வாயை திறக்க மாட்டேன் என்கிறார் ? நெடுவாசலில் நின்றபடி வைகோ ஆவேசமாக கத்துகிறாரே மணல் கொள்ளைக்கு எதிராக இதே வைகோ கத்த தயாரா? நன்றி தமிழ் மீம்ஸ் அரசியல் கட்சிகள் தங்கள் வருமானத்தை பாதிக்கும் எந்த பிரச்சனைகளிலும் மக்களை போராடவிடுவதில்லை ! நாம் எழுச்சி எழுச்சி என்று சொல்லிக்கொள்ளும் எல்லா போராட்டமும் அரசியல் கட்சியையும் அதன் வருமானத்தையும் நேரடியாக பாதிக்காத திட்டங்களே ! எளிதாக சொன்னால் தங்கள் பிழைப்பை பாதிக்காத போராட்டங்களே கட்சிகளால் அனுமதிக்கப்படுகின்றன. மீடியாக்களில் கவர் செய்யவும்பட...

அதிமுக நல்லவர்கள் அல்ல திமுக சளைத்தவர்களும் அல்ல

Image
திமுக ஆட்சிக்கு வரவேண்டும் என நேற்று நடந்த ஒரு சட்டசபை நிகழ்வை மனதில் வைத்துக்கொண்டு சொல்பவர்கள் சிந்திப்பீர் ! திமுக ஆட்சிக்கு வந்தால் அவர்கள் கையில் எடுக்கும் முதல் அஸ்திரம் ரியல் எஸ்டேட் துறையை முடுக்கி விடுவதுதான். மணல் கொள்ளையில் அதிமுக கில்லாடி என்றால் ரியல் எஸ்டேட் கொள்ளையின் ஜாம்பவான் திமுக ! இன்று நடுத்தர வர்கம் வீடு என்ன, நிலம் கூட வாங்க முடியாத அளவுக்கு மனையின் விலையை ஏற்றிய பெருமை திமுகவை சாரும் ! (அன்று நிலம் வாங்கிய எவரும் விற்க முடியாத இன்றைய நிலைக்கு ஜெயலலிதா பத்திர பதிவு விலையை ஏற்றியது ஒரு காரணம்). ஒரு சின்ன உதாரணம் திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகம் (2009 ஆம் ஆண்டு) எங்கே கட்டப்படப்போகிறது என்பதை கடைசிநிமிடம் வரை அறிவிக்காமல், இங்கே வரும் அங்கே வரும் என லோக்கல் திமுக காரர்கள் 24 * 7 லோக்கல் தொலைக்காட்சியில் காந்தியில் தொடங்கி ஐஸ்வர்யா ராய் நகர் வரை விதவிதமான நகரை உருவாக்கி திருவாரூரை சுற்றி 10 கிமீ ஒரு விவசாய நிலம்கூட இல்லாமால் அழித்த கதை ஊரறிந்தது. பின்னர் வெள்ளை வேட்டி, Bolero கார் என ஊரை சுற்றும் இவர்கள் என்ன உழைத்தா சம்பாதித்தார்கள் ? சசிகலாவை நாம் எத்தனை பல...

இஸ்ரோவும் 104 செயற்கைகோளும்

Image
இஸ்ரோ ஒரே செலுத்துதலில் (launch) 104 செயற்கைகோள்களை பிப்ரவரி 15 அன்று செலுத்த உள்ளது. இதற்கு முன் ரஷ்யா 37 செயற்கைகோள்களை ஒரே launch ல் செலுத்தியது தான் உலகசாதனையாக உள்ளது. ரிஸ்க் நிறைந்த இந்த திட்டத்தை இஸ்ரோ கையில் எடுக்க காரணம் இல்லாமல் இல்லை. இன்று உலகம் முழுவதும் தனியார் நிறுவனங்கள் தங்கள் தொழிலுக்கு பயன்படும் செயற்கைகோள்களை தயாரித்து விண்ணில்செலுத்துவது அதிகரித்துள்ளது. செயற்கோள்களை நிறுவனங்களே தயாரித்துகொண்டாலும் அதை விண்ணில் செலுத்த ராக்கெட் அவர்களிடம் இல்லை. அதிலும்  ராக்கெட் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடியது எனவே நிறுவனங்கள் ராக்கெட் ஏவுதலில் சிறந்து விளங்கும் மற்ற நிறுவனங்களிடம் பணம் செலுத்தி தங்கள் செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தும் புதிய தொழில் வாய்ப்பு உலகம்முழுவதும் பெருகிவருகிறது. இதில் நிறுவனங்களுக்கு இரண்டே எதிர்பார்ப்பு தான் குறைந்த செலவு மற்றும் வெற்றிக்கான சாத்தியம் அதிகம் உள்ள ராக்கெட். இஸ்ரோ இது இரண்டிலுமே கில்லாடி ! இஸ்ரோவின் PSLV ராக்கெட் விராட் கோஹ்லி போன்று வெற்றி நாயகன் என்று உலகம் முழுவதும் அறியப்படுகிறது. இதுவ...

கண்டிப்பாக படிக்க பொருளாதார ஆய்வறிக்கை !

Image
நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் ! ஒவ்வொரு முறை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முதல் நாள் பாராளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை (Economic Survey) என்று ஒரு ஆவணம் (document) நிதி அமைச்சரால் தாக்கல் செய்யப்படும். இந்த வருடத்தின் ஆய்வறிக்கை தலைமை பொருளாதார ஆலோசகர் திரு அரவிந்த் சுப்ரமணியத்தால் தயாரிக்கப்பட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆவணம் கண்டிப்பாக அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று ! உலகநடப்புகளான பெட்ரோல் விலை ஏற்ற இறக்கம், பிரெக்ஸிட், டிரம்ப் முதல் உள்ளூர் நடவடிக்கையான நோட்டு நடவடிக்கை, மாநிலங்களின் செயல்பாடுகள் என பல தளங்களில் ஆழமாக பயணிக்கிறது இந்த ஆவணம்! உதாரணமாக JAM (Jandhan - AADHAR - Mobile) திட்டம் தான் இந்தியாவின் எதிர்காலம் என்று இந்த ஆவணம் சொன்னபொழுது இரண்டரை ஆண்டுகளாக எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளான அனைவருக்கும் வங்கி கணக்கு, ஆதார் வழி பணப்பரிமாற்றம், மானியங்கள் அனைத்தும் நேரடியாக வங்கியில் செலுத்துதல் என அனைத்தும் JAM திட்டத்தை பொருந்தி செல்வதும் தற்செயலானது அல்ல ! எதிர்பார்ப்புகள் பெரிது ! காலம் சிறிது ! வாய்பளித்தவர்களுக்கு பொறுமை கம்மி ! கண்டிப்பாக ...

பட்ஜெட் 2017 - சத்தம்போடாமல் சர்க்கரை மானியம் ரத்து

Image
அருண் ஜெட்லி பட்ஜெட்டில் சத்தம்போடாமல் சர்க்கரை மானியத்தை ரத்து செய்யும் மோசமான திட்டத்தை அறிவித்துள்ளார் ! குடிசைவாசி முதல் மாளிகைவாசி வரை அனைவரும் பயன்படுத்தும் சர்க்கரையை (sugar) விவசாயிகளிடம் இருந்து மத்திய அரசு 30 ரூபாய்க்கு கொள்முதல் செய்கிறது. ஆனால் அதே சர்க்கரை ரேஷன் கடையில் 13 ரூபாய்க்கு விற்கப்படுகிறது ! மத்திய அரசு ஒவ்வொரு கிலோ சர்க்கரைக்கும் 17 ரூபாயை மானியமாக தருகிறது ! இதன் மூலம் மத்திய அரசுக்கு வருடம் 4200 கோடி செலவாகிறது. இந்த பட்ஜெட்டில் அந்த மானியத்தை ரத்து செய்துள்ளார் அருண் ஜெட்லி ! எனவே வரும் நிதி ஆண்டில் ஒன்று ரேஷன் கடையில் மக்கள் 30 ரூபாய் கொடுத்து சர்க்கரையை வாங்கிக்கொள்ளவேண்டும் அல்லது மத்திய அரசுக்கு பதிலாக மாநில அரசுகள் அந்த 17 ரூபாய் மானிய செலவை ஏற்கவேண்டும் ! மக்கள் மத்திய, மாநில அரசு என்றெல்லாம் பிரித்து பார்க்கமாட்டார்கள் ! அவர்களை பொறுத்தவரை ரேஷன் கடை என்பது மாநில அரசின் கடை ! அங்கு சர்க்கரை 13 ரூபாய்க்கு பதிலாக 30 ரூபாய்க்கு விற்கப்பட்டால் கண்டிப்பாக மக்கள் அதை ஏற்கமாட்டார்கள். இதை எதிர்கொள்ள மாநில அரசுகள் வேறு வழியில்லாமல் தங்கள் நித...

பெப்சி, கோக் விற்பனை சரிவு தற்காலிகமானது

Image
பெப்சி கோக் விற்பனை சரிவு தற்காலிகமானது என்றுதான் தோன்றுகிறது. காரணம், சந்தை (market) என்பதே demand vs supply என்ற கோட்பாட்டை மையப்படுத்தியது தான். மக்கள் யாரும் குளிர்பானம் பருகுவதையே நிறுத்தப்போவதாக சொல்லவில்லை ! பெப்சி கோக் இரண்டையும் பருகுவதை நிறுத்துவதாக தான் சொல்லியிருக்கிறார்கள். அப்படியானால் 1000 பெப்சி பாட்டில்கள் விற்ற இடத்தில், அதற்கு ஈடாக குறைந்தது 500 பாட்டிலாவது வேறு ஒரு குளிர்பானம் விற்பனைக்கு வரவேண்டும் ! தமிழகத்தை சேர்ந்த குளிர்பான நிறுவனங்கள் தங்கள் தொழிலை விரிவுபடுத்த மிகச் சரியான காலகட்டம் இது. ஆனால் சந்தையில் பெப்சி, கோக் விற்பனை சரிவு ஏற்படுத்தும் வெற்றிடத்தை அவர்களால் நிரப்ப முடியாவிட்டால் கண்டிப்பாக 6 மாதத்திலோ ஒரு வருடத்திலோ பெப்சி கோக் விற்பனை பழைய நிலையை எட்டும் ! வியாபாரிகள் மக்களிடம் ஒத்துழைப்பு இல்லை என்று சிம்பிள் காரணத்தை சொல்லி தப்பித்து கொள்வார்கள்! இன்னொரு சந்தேகம் நம்ம ஆபிஸ்ல சப்பாத்திக்கும் தோசைக்கும் கோக் குடிக்குற மற்ற மாநிலத்தவர் ஏற்படுத்தும் demandஐ எப்படி எதிர்கொள்ள போகிறார்கள் நம் வியாபாரிகள்?

LTTE பிரபாகரனும் ஜல்லிக்கட்டும்

Image
LTTE பிரபாகரன் தொடர் வெற்றிகளை குவித்த பொழுது ராஜிவ் காந்தி அவரை டெல்லிக்கு வரவழைத்து, ஈழத்தை உலகநாடுகள் ஒத்துக்கொள்ளாது எனவே தமிழ்நாடு போன்ற தமிழ் மாநிலம் ஒன்று இலங்கையில் பெற்றுதருகிறேன் உன் போராட்டத்தை முடித்து கொள் என்றார்.. அன்றைக்கு இலங்கை அரசு தொடர் தோல்விகளால் துவண்டு இருந்ததால் அதற்கு சம்மதித்தது. ஆனால் பிரபாகரன் அதை ஏற்கவில்லை. உடனே MGR வரவழைக்கப்பட்டார்.. MGR பேசிப்பார்த்தார்..இதுதான் உண்மை நிலவரம் இவ்வளவு தான் முடியும் என்று கெஞ்சிப்பார்த்தார்.. அப்பொழுதும் பிரபாகரன் இறங்கவில்லை ! காரணம் பிரபாகரன் பெற்ற தொடர் வெற்றிகள் ! இலங்கையில் அவரை எதிர்க்க ஆள் இல்லை என்ற நிலை இருக்கும் பொழுது ஏன் தான் இறங்கிவரவேண்டும் என்ற மனநிலையில் பிரபாகரன் இருந்தார். MGR மற்றும் ராஜிவ்வை புறந்தள்ளினார்.. MGR மரியாதையாக ஒதுங்கி கொண்டார் ! காலம் சுழன்றது ! பிரபாகரன் வெற்றி தொடர வில்லை ! ஒரு போராட்டத்தை நடந்தி அதற்கு அரசியல் தீர்வு என்று எதிராளி இறங்கி வந்தால் தன்னுடைய வெற்றிகளை பார்த்து தான் எதிராளி பயந்து இறங்கி வருகிறார் என்று அவரை ஏளனமாக புறந்தள்ளுவது அழகல்ல என்பதற்கு பிரபாக...

ஜல்லிக்கட்டும் எனது பதிவுகளும்

Image
நான் இதை சொன்னால் சிலர் வருத்தப்படலாம் இல்லை கோவப்படலாம் இருந்தாலும் இதுதான் உண்மை ! இன்று பீட்டா விற்கு எதிராக மிகப் பெரிய போராட்டங்கள் நடக்கின்றன போலீஸ் காரர்களும் அமைதியாக வேடிக்கை பார்க்கின்றனர். இதுவே மணல் கொள்ளைக்கு எதிராக போராட்டம் நடத்தி பாருங்கள் அன்று தெரியும் அரசியல் என்றால் என்ன அதிகார வர்க்கம் என்றால் என்ன ஊழலின் மோசமான முகம் எல்லாம் ! அன்று மாணவர் எழுச்சி எல்லாம் குண்டர்களை கொண்டு தூக்கி வீசப்படும் ! நீங்கள் இன்னும் ஊழலுடன் மோதிப் பார்க்கவில்லை ! சட்டத்தை கொண்டு போராடும் பீட்டா அமைப்போடு தான் மோதுகிறீர்கள்.. மறந்து விடவேண்டாம் ! அன்று இந்த மீடியா உங்களை ஆதரிக்காது ! அன்று OPS இறங்கி வரமாட்டார் ! அரசியல் அன்று புரியும் ! - ஜனவரி 20, 2016                                                                                                 ...